காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 09 இடமும், Night Watchman பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Night Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Office Assistant, Night Watchman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2021 அன்றைய நாளின்படி குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC / ST பிரிவினருக்கு 05 வருடமும், BC / MBC / DNC பிரிவினருக்கு 02 வருடமும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நிலை 1 ஊதிய அளவின்படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 30.05.2022 என்ற கடைசி நாளுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும்.
தபால் முகவரி:
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
க.எண்.1/304-4, 3-வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு,
கிருஷ்ணகிரி – 635 002.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh