காலிப்பணியிடங்கள்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனம் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time) ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் M.B.B.S / B.H.M.S / M.S / M.D டிகிரி முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
வயது விவரம்:
30.06.2022 ம் தேதியின் படி, FMO பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 45 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்று அறிவித்துள்ளது.
ஊதிய விவரம் :
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- Visiting Specialists பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒரு வருகைக்கு (2 மணி நேரத்திற்கு) ரூ.2,500/- ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- Merit List
- Interview
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022 ம் தேதி முதல் 06.06.2022 ம் தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh