வேலைவாய்ப்பு

சூப்பர்! ரூ.67700/- ஆரம்ப சம்பளத்தில் CRPF வேலைவாய்ப்பு!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Commandant (Engineer) and Deputy Commandant ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் – மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர் – Commandant (Engineer) and Deputy Commandant
பணியிடங்கள் – 13
விண்ணப்பிக்க கடைசி தேதி – Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

CRPF படையில் Commandant (Engineer) மற்றும் Deputy Commandant பணிகளுக்காக 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு :

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரிகளாக 15 வருடங்கள் பணியாற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 52 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம் :

விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67700/- முதல் அதிகபட்சம் ரூ. 215900/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_220_1_894082021.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாதம் ரூ.1,01,500 வரை சம்பளம்.. சென்னை ஐஐடி-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: