வேலைவாய்ப்பு

சூப்பர்! IOCL வேலைவாய்ப்பு – 480 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – IOCL
பணியின் பெயர் – Apprentice
பணியிடங்கள் – 480
விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

தென் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பதவிக்கு 480 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

30.06.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய வர்த்தகத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

ஐஓசிஎல் அப்ரண்டிஸ் தேர்வுசெயல் முறை ஆனது ஐடிஐ மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply For IOCL Recruitment – https://iocl.com/

Official PDF Notification – https://drive.google.com/file/d/1LHncj_OI0ucvpR-1ZIY_tbvduBwvKXSh/view?usp=sharing

Official Site – https://iocl.com/

 

இதையும் படிங்க:  ரூ.20,000/- ஊதியத்தில் கோவை சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: