விளையாட்டு

எனக்கு தல தோனி சொன்ன சூப்பர் ஐடியா.. யார்க்கர் மன்னன் நடராஜன் ஓபன் டாக்..!

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி தொடர் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போது தோனியுடன் பேசிய அனுபவனங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறுகையில், “கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் பேசும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. என்னை உற்சாகப்படுத்திய தோனி பந்து வீச்சு குறித்து பல விஷயங்களை தெரிவித்தார். எனது ஃபிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்க கூறினார். மேலும் மெதுவான பவுன்சர்கள், கட்டுகள் மற்றும் அது போன்ற மாறுபாடுகளைப் பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார். இது தனக்கு பயனுள்ளதாக இருந்தது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “கடந்த ஐபிஎல் தொடரில் எனது பந்து வீச்சை எதிர் கொண்ட தோனி ஆட்டமிழந்தார் அதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அவர் எனது முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததை மட்டும் சிந்தித்தேன்.

பிறகு நாக் அவுட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதை அனைவரும் பாராட்டியபோது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.ஆனால் எனக்கு மகள் பிறந்த செய்தியை அன்று யாருக்கும் சொல்லவில்லை”என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: