தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை? ஊழியர்கள் கோரிக்கை!!!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு மாதத்தின் இரண்டு ஞாயிற்று கிழமைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரேஷன் ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நியாயவிலை பொருட்கள் வழங்கும் விதமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பொருட்களை வழங்கும் விதமாக ரேஷன் ஊழியர்கள் வாரத்தின் 6 நாட்கள் ரேஷன் கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.

ஞாயிற்று கிழமை அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நியாயவிலை பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் கடைகளை திறந்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த வாரங்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி தற்போது வரை அந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஷன் ஊழியர்கள் ஞாயிற்று கிழமைகளில் வேலை இருப்பதால் விழாக்கள், வீட்டிற்கு வரும் உறவினர் மற்றும் நண்பர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு கூட செல்ல முடிவதில்லை. தற்போது வழங்கப்பட்டு வரும் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் கிடங்குகளில் இருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அதனால் விடுமுறை முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே பழைய முறைப்படி அனைத்து ஞாயிற்று கிழமைகளையும் விடுமுறை நாளாக மாற்றுமாறு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: