நாடு முழுவதும் தற்போது தான் கோடை காலம் துவங்கியுள்ளது. பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் தான் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருந்தது. கூடுதல் வெப்பத்தினால் அவ்வப்போது சில இடங்களில் மழைப்பொழிவும் இருந்து வந்தது. இருப்பினும் மாறாக வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.
எப்போதும் மார்ச் ஏப்ரல் மாதங்களிலெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனால், இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் இருந்து தான் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இதனால் மாணவர்கள் தற்போது பொதுத் தேர்விற்கு ரெடியாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் மக்களுக்கு தோல் வியாதிகள் அதிகளவில் ஏற்படுகின்றது. குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களை மூட மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh