ஆந்திராவில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவுகளை கல்வித்துறையினர் சனிக்கிழமை வெளியிட்டனர்.
கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. 1 முதல் 9-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் முறையாக தேர்வு நடத்தப்படவில்லை. மாதாந்திர மற்றும் பிற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதலில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் பின்னர் 6 முதல் 8 வகுப்புகளுக்கும் அதனைத் தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கும் பல்வேறு கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தன.
டிசம்பரில் கொரோனா 3-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால் பள்ளிகள் வழக்கமான நிலையில் இயங்கத் தொடங்கின. இருப்பினும் ஜனவரி மாதத்தில் மீண்டும் கொரோனா 3வது அலை தலைதூக்கியது. பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அடிப்படையில் ஜனவரி மாத இறுதியில் தாக்கம் குறையத் தொடங்கியதால் பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை, பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமை வெளியிட்டது.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. மாநிலத்தில் 3,776 மையங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை சுமார் 6.30 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கிடையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை நடத்த அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதனை அடுத்து கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. ஆந்திராவில் உள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 25 முதல் ஜூன் 20 வரை கோடை விடுமுறை அளிக்கவும் துறை முடிவு செய்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh