மாவட்டம்

குடிப்பதற்கு பணம் இல்லாத விரக்தியில் தற்கொலை..

திருச்சி கிழக்கு தாரநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(46). குடிப்பழக்கம் இருக்கும் இவர் தனது மனைவி அமுதாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு நச்சரித்து உள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுக்கவே விரக்தியடைந்த மணிகண்டன் எலி பேஸ்டை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் உயிருக்கு போராடிய அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!