சினிமாபொழுதுபோக்கு

கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம் – மாப்பிள்ளை இவர் தானா? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக வளம் வந்தவர் ஆனந்தி. கயல் படத்தின் மூலம் பிரபலமான இவர் கயல் அனந்தி என்றே அழைக்கப்படுகிறார். இவருக்கு நேற்று இரவு திருமணம் நடைபெற்றது. தற்போது இவரது மாப்பிள்ளையும் ஓர் உதவி இயக்குனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கயல் ஆனந்தி:

கடந்த 2014ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பொறியாளன் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஆனந்தி. ஆனால் இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இவர் நடித்த கயல் படம் வெளியானது. இந்த படத்தில் ஆனந்தி தனது நடிப்பு மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு இவர் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் இந்த படத்தை பற்றி இயக்குனர் பேட்டியளிக்கும் போது இந்த படத்திற்கு ஓர் சுமாரான கதாநாயகி தேவைப்பட்டது, அதனால் ஆனந்தியை தேர்வு செய்தேன் என்று கூறி இருந்தார். இந்த கருத்து ஆனந்தியை பெரிதும் பாதித்தது.

தெலுங்கானாவில் வைத்து திருமணம்:

ஆனால் இந்த படம் தான் அவரது சினிமா பயணத்திற்கு நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளது. அதன் பிறகு இவர் திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சண்டிவீரன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிக்கும் போது இவரை பற்றிய கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணமாக தான் இருந்தது. இவருக்கு தற்போது நேற்று இரவு தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் பகுதியில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் மிஸ்கின் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் இது காதல் திருமணம் அல்ல என்றும் இரு வீட்டார்கள் சேர்ந்து நடத்திய திருமணம் என்று அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் காரணமாக தான் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் மிஸ்கின் என்பவர் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இவர் அக்னி சிறகுகள், அலாவுதீன் அற்புத கேமரா உள்ளிட்ட படங்களை இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் இயக்குனர் நவீன் என்பவரின் மச்சான் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Back to top button
error: Content is protected !!