சினிமாபொழுதுபோக்கு

‘டெடி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 19-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, வருகிற மார்ச் 12-ந் தேதியே ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!