உலகம்

“பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்.. களத்தில் இறங்கும் நாசா..!

சூரியக் குடும்பத்தில் தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் நிறைந்திருக்கும் ‘கோல்டுமைன் ஆஸ்டிராய்டு’ என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கணக்கில் அடங்காத மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாசா ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1852ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இத்தாலிய வானியலாளர்கள் இந்த சிறுகோளை கண்டுபிடித்தனர். இந்த சிறுகோளுக்கு கிரேக்க கடவுளின் பெயரான சைக்கி (Psyche) எனப் பெயரிட்டனர்.

asteroid art

இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. இந்த சிறுகோள் 124 மைல் அகலமுள்ளது.

இந்த சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மாட்டுக்கும் சுமார் 10,000 Quadrillions மேல் இருக்கும் என நாசா கணித்துள்ளது. ஒரு Quadrillion என்பது 1-ஐ தொடர்ந்து பின்னால் 15 பூஜ்ஜியங்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு மாபெரும் தொகை.

இந்த சிறுகோளில் தங்கம் மட்டுமில்லாமல் இரும்பு உள்ளிட்ட உலோகங்களும் நிறைந்திருக்கும் என நாசா கணித்துள்ளது.

அதன்படி, உலோகங்கள் நிறைந்திருக்கும் சிறுகோள்கள் வரிசையில் இந்த கோளை நாசா வகைப்படுத்தியுள்ளது.

வரும் 2026ம் ஆண்டுக்குள் அந்த கோளின் தோற்றத்தை கண்டுபிடிக்கவும் நாசா ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது அதன் முதல்கட்டமாக சிறுகோள் வெப்பநிலையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியாவை சேர்ந்த கல்யாணி சுகத்மே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:  துருக்கியில் சோகம்! வெள்ளத்தால் போகும் உயிர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: