ஆரோக்கியம்

உடல் பருமன் இருப்பவருக்கு இப்படி ஒரு ஆபத்தா?

குடிப்பழக்கம் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக உடலில் ஏற்படும் Cirrhosis மற்றும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கும் மதுப்பழக்கம்தான் முக்கிய காரணம் என பலரும் நினைக்கின்றனர். இதுபோன்ற கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மதுப்பழக்கம் மட்டுமின்றி உடல் பருமனும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதீத மதுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து கல்லீரலில் அதிகளவு கொழுப்பை சேர்க்கின்றன. இந்த பாதிப்பு non-alcoholic fatty liver disease – NAFLD என அழைக்கப்படுகிறது.

உடலில் NAFLD ஏற்படுத்தும் பாதிப்புகள்

நம் உடலில் கல்லீரல் மிகமுக்கியமான உறுப்பு ஆகும். இது நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகவும், சேதமடைந்த செல்களை சீர்ப்படுத்தி உடலுக்கு தேவையான இரும்பு சத்தை சேமித்து வைக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சக்தியாக மாற்றி உடல் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. கல்லீரலில் அனைவருக்குமே சிறிதளவு கொழுப்பு இருக்கும். உடல் பருமன் இருப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பின் அளவு 5 முதல் 10 சதவீதம் வரை இருந்தால் அவர்களுக்கு NAFLD பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம்.

பெரும்பாலானோருக்கு NAFLD உடலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. சிலருக்கு கல்லீரல் வீங்கி தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு (Non-Alcholic Steato Hepatitis – NASH) என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு காரணமாக உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு தசை வீங்கி கல்லீரல் செயல்பாட்டை குறைக்கும். தசை அதிகளவு வீக்கம் அடையும் நிலையைதான் cirrhosis என அழைக்கின்றனர். இது கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாகலாம்.

உடலில் NAFLD ஏற்படுவதற்கான காரணங்கள்

சிலருக்கு NAFLD எந்த விதமான காரணங்கள் இன்றியும் ஏற்படலாம். எனினும், சிலருக்கு கீழ்கண்ட காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

 • பொதுவாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் காரணமாகவே NAFLD பாதிப்பு ஏற்படுகிறது. நவீன பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மரபணு மூலமாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது.
 • டைப் 2 நீரிழிவு நோய்
 • மாரடைப்பை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றங்கள்
 • பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகைகளை உட்கொள்ளுதல்

உடலில் NAFLD இருப்பதற்கான அறிகுறிகள்

பெரும்பாலானோருக்கு NAFLD பாதிப்பு cirrhosis நிலையை அடையும் வரை உடலில் எந்த விதமான அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. எனினும், சிலருக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் NAFLD பாதிப்பு உள்ளது என அறிந்து கொள்ளலாம்:

 • அடிவயிற்று பகுதியில் வலி அல்லது வயிறு நிறைந்துள்ளதை போன்ற உணர்வு ஏற்படுதல்
 • குமட்டல்
 • பசியின்மை
 • கண் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்
 • அதிகளவு களைப்பு ஏற்படுதல்
 • மன குழப்பம்
 • கால்கள் மற்றும் அடிவயிறு வீங்குதல்

NAFLD சிகிச்சை முறைகள்

உடல் பருமன் காரணமாக ஏற்படும் NAFLD பாதிப்பை சரி செய்ய உடல் எடையை குறைப்பதே தீர்வாகும். மருத்துவ மேற்பார்வையில் சீரான எடை குறைப்பு மேற்கொள்ளும் போது இந்த பாதிப்பு மெல்ல சரியாக துவங்கும். இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இத்துடன் NAFLD பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை பலன் அளிக்காமல் நிலைமை மோசமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.

மனித உடலில் மேற்கொள்ளப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தற்போது மிகவும் பொதுவான ஒன்றாக மாறி இருக்கிறது. மற்ற உறுப்புகளை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை முறைகள் மிகவும் சிக்கலான வழிமுறைகள் அடங்கியது. ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது கல்லீரல் வழங்குவோர் மற்றும் அதனை பெறுவோருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு.

கல்லீரல் தானம் செய்ய முன்வருவோர் தனது உடலில் இருந்து சிறுபகுதியளவு கல்லீரலை தானமாக வழங்கினாலே போதுமானது. இவ்வாறு செய்யும்போது தானம் கொடுத்தவருக்கு கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு வளர துவங்கிவிடும். இதேபோன்று தானம் பெற்றுக் கொண்டவர்கள் உடலிலும் சிறு பகுதி கல்லீரல் நாளடைவில் வளர துவங்கும். சமயங்களில் உயிரிழந்தவர்கள் உடலில் இருந்தும் கல்லீரல் எடுத்து பயன்படுத்தலாம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் தானம் கொடுப்பவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும். பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

உங்களுக்கும் NAFLD பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நினைத்தால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரிடம் உடனே செல்ல வேண்டும். இதுபோன்ற நிபுணர்கள் பெரும்பாலும், அறுவை சிகிச்சை செய்யவே பரிந்துரைப்பர் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளியின் உடல் பாதிப்பை சிறப்பான முறையில் குணப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, பின் வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலையில்தான் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைப்பர். NAFLD மற்றும் இதர கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் மிகவும் அபாயகரமானவை ஆகும். இவற்றுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நோய் பாதிப்பை விரைந்து குணப்படுத்த உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: