இந்தியா

‘கோவாக்சின்’ தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை வெற்றி – பொதுமக்களுக்கு செலுத்த முடிவு

கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருந்தது. மேலும் இந்த தடுப்பூசி வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கான 3ம் கட்ட பரிசோதனை நிறைவுபெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

கொரோன தொற்றில் இருந்து மீள்வதற்காக அனைத்து நாடுகளும் போராடி வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

covaxin human trials 1595505792

தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு வருகின்றனர். ஆனால் சிலதினங்களுக்கு முன்பு புதிதாக ஓர் குற்றசாட்டுகள் எழுந்தது. அது என்னவென்றால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட கிளினிக்கில் பரிசோதனை முடிவு பெறவில்லை. அதற்குள் எப்படி தலைமை இந்தியா கட்டுப்பாடு அமைப்பு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு வழங்க உத்தரவு அளிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

vacc

தற்போது இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கான 3ம் கட்ட பரிசோதனை தற்போது நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனையில் 25,800 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!