தமிழ்நாடு

அரசு சார்பில் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் – அமைச்சர் பதில்!

தமிழகத்தில் மகளிருக்கு அரசு நகர பேருந்தில் இலவச பயண திட்டம் நடைமுறையில் இருப்பதால், மானிய விலையில் இருசக்கர வாகன திட்டம் பெண்களுக்கு தேவைப்படவில்லை. அதனால் மானிய விலையிலான ஸ்கூட்டர் என்ற அறிவிப்புக்கு பெண்களிடம் இருந்து வரவேற்பு இல்லை என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பெற்ற நாள் முதல் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் முதல்வர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் மாவட்டம் முழுவதும் சென்று தடுப்பு பணிகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி என்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கு தேவையான நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தில் அரசு பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய அமைச்சர் நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் புதிதாக செயல்படுத்தப்படும். புதிதாக உருவான மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டதால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் – மாவட்ட ஆட்சியர்!!
Back to top button
error: