இந்தியா

ஆய்வு தகவல்! தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% உயிருக்கு ஆபத்து இல்லை – நிதி ஆயோக் உறுதி!!

இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் 98 சதவீதம் கொரோனா நோய்த்தொற்றால் உயிருக்கு பாதிப்பு இல்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த 2 மாதங்களாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்தது. ஏராளமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் தான் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலை வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது.

எனவே மருத்துவத் துறையினர், ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிர்கொல்லி நோய்க்கு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்கள் உழைப்பின் பயனாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. 2 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தொற்றுக்கு எதிராக பேராயுதமாக செயல்படுகிறது. உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்கி தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கொரோனா தடுப்பு களப்பணியாளர்களிடம் நிதி ஆயோக் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 92 சதவீதம் உயிருக்கு பாதிப்புகள் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு 98 சதவீதம் உயிருக்கு ஆபத்து இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். ஆனால் 2 டோஸ்களும் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட 42 ,720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்தனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: