தமிழ்நாடு

கொரோனாவால் மாணவ சமுதாயம் பாதிப்பு அடைந்துள்ளது – அரியர் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசு பதில் மனு..!

கொரோனா நோய் பரவல் காரணமாக மாணவர்களை அனைவரும் மிகவும் பாதித்துள்ளதாகவும், தமிழக அரசு அரியர் தேர்ச்சி குறித்து எடுத்த முடிவு விதிகளுக்கு புறம்பானது இல்லை என்று தமிழக அரசு சார்பில் அரியர் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரியர் விவகாரம்:

தமிழக அரசு கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு பருவ தேர்வுகளை ரத்து செய்தது. அதே போல் கல்லூரியில் அரியர் உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது பல கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்தார்.

download 21

இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த வழக்கின் போது மத்திய, மாநில அரசு பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே போல் இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கிற்கு தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு அளித்துள்ள பதில் மனு:

அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் அனைவரும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்களும் பாதிப்பினை சந்தித்துள்ளனர். பொது முடக்க காலத்தில் இருந்து கல்லூரிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களின் நலனுக்காக அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிடம் இருந்து ஆலோசனையை பெற்ற பின் தான் அரியர் தேர்வுகள் ரத்து குறித்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன”

202010210432046064 Corruption emanates from Revenue Dept Madras High Court SECVPF

“இதனால் இந்த உத்தரவு பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது கிடையாது. அரியர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது. அரியர் தேர்வுகளை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்கால நலன் பாதிப்படையாது” இவ்வாறாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!