தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தனர். இதனால் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களை கருத்தில் கொண்டு அரசு, அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அர்ச்சுனன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசு வழங்கியது போல் மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பணிநிரவலில் டிரான்ஸ்பர் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் முதல் வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh