தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமான நீலகிரிக்கு வரும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அப்பகுதிகளில் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான ஆவணம் அல்லது 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் சோதனை சாவடிகளில் பயணிகளின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டு, முகவரிகள் சரிபார்க்கப்பட்டு பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. அவ்வாறு அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதனால் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டாலும் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் வெளியூர் பயணிகள் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  சிலிண்டர் விலை ஏற்றம்; சீமானின் நிலைப்பாடு என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: