உலகம்

பிச்சை எடுப்பவர் மற்றும் பிச்சை போடுபவர் மீது கடும் நடவடிக்கை – இலங்கை அரசு அதிரடி உத்தரவு..!

இலங்கையில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வருபவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பிச்சை போடுவரின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இலங்கையில் உள்ள கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வருபவர்களை கண்காணித்த இலங்கை அரசு அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளது. கொரோனா காலத்தில் பலருடைய வேலை வாய்ப்பு பறிபோனதால் இலங்கையில் உள்ள பலர் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளனர்.

signal beggers

இந்த செயல் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிச்சை எடுப்பவரின் மீதும், பிச்சை போடுபவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

விசாரணை

இலங்கை போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா தலைமையில் நடந்த விசாரணையில், 90% பிச்சை எடுப்பவர்கள் உண்மையான பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், தினக்கூலியாக இத்தொழிலை செய்து வந்தாகவும் தெரிய வந்தது.

gave money to beggers

மேலும் சிக்னலில் பிச்சை எடுப்பவர், பிச்சை போடுபவர் மற்றும் சிக்னலில் இருந்து பொருட்கள் வாங்குபவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பின்பு அவர் உண்மையான பிச்சைக்காரர்கள் யார்? என்பதை சமூக சேவை நிறுவனத்துடன் கலந்தோசித்து பின்னர் முடிவினை அறிவிப்பர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!