சினிமா

செப். 3 ம் தேதி தமிழகம் திரும்பும் வலிமை படக்குழு!!

தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தமிழில் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். வலிமையில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். சுமார் 2 வருடங்களாக ‘வலிமை’ படம் குறித்த எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

அதனால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்களை ட்ரெண்டாக்கினர். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா பரவல் ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தள்ளிப்போன நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

7 நாட்கள் ஐரோப்பாவில் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக் காட்சியை தற்போது எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து வலிமை படக்குழு தமிழகம் திரும்புகிறது. ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட 10 ஹேஷ்டேக்குகளில் வலிமை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் 'ஜெயில்'!
Back to top button
error: