சினிமாபொழுதுபோக்கு

சித்ராவின் கலாட்டாக்களுடன் வெளியான ஸ்டார்ட் மியூசிக் ப்ரோமோ – கதறும் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதை இது வரையிலும் நம்ப முடியாத அவரின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவர் கடைசியாக பங்கு பெற்ற ஸ்டார்ட் மியூசிக் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. 8 வருட போராட்டத்திற்கு பிறகு இவரின் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும் புகழின் உச்சத்தை தொடும் வேளையில் இப்படி இவர் தற்கொலை செய்துகொள்வார் என யாருமே நினைத்து கூட பார்க்க வில்லை.

star

தற்போது வரை சித்ராவின் தற்கொலைக்கு அப்படி என்ன தான் காரணம் என்பதும் தெரியவில்லை. சித்ராவின் அம்மாவும் ஹேமந்த் தான் காரணம் என்று புகார் குற்றம் சாற்றி வருகிறார். சித்ராவின் தற்கொலை வழக்கிலும் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியான வண்ணம் உள்ளது.

star 2 1

இந்நிலையில் சித்ரா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது தான் வெளியாகியுள்ளது. அவரது தோழி சரண்யா சித்ரா தற்கொலை செய்த போது கடைசியாக எடுத்த வீடியோ என்று பதிவிட்டிருந்தார். அதில் அவர் சிவப்பு நிற உடை அணிந்திருந்தார்.

sm

பலருக்கும் அது என்ன நிகழ்ச்சி என்று டவுட்டாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் சித்ரா கலந்துகொண்டதை அடுத்து செம கலாட்டாவாகவே வழக்கம் போல இருந்துள்ளார்.

sm2

முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் எந்த கவலையும் இல்லாமல் வழக்கம் போல இருந்த சித்ராவா இப்படி தற்கொலை செய்துக்கொண்டார் என்ற கேள்வி அனைவர்க்கும் எழுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது தான் நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் சித்தார்த்த அந்த சிரித்த முகத்தை பார்க்கும்போது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கண் கலங்க தான் செய்கிறது.

Back to top button
error: Content is protected !!