உலகம்

இலங்கையில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு –அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா நான்காம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. அந்நாட்டின் கொழும்பு மாவட்டம் கடுமையாக பாதிப்பு உள்ளாகியுள்ளது. அந்த மாநகரில் மட்டும் 75 சதவீத பாதிப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ் டெல்டா பிளஸ் வகை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. அதிகரிக்கும் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 3 கோடி மக்கள் வாழும் இலங்கையில், மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இதனால் இலங்கையில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,76,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 6,700 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரங்களாக தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதனால் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பாதிப்புகள் அதிகமாவதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி காலை 4 மணி வரையில் 10 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று இரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட திடீர் உத்தரவு!!
Back to top button
error: