தமிழ்நாடு

மின் தடைக்கு அணில் தான் காரணம் – மின் ஊழியர் வெளியிட்ட வீடியோ!!

தமிழ்நாட்டில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதைப்பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்சார பிரச்சனைக்கு அணில் தான் கரணம் என்று கூறினார், இவர் சொன்னது மிகவும் நகைச்சுவையான பதில் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அணில் ஒன்று மின்தடைக்கு காரணமாக இருந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மினத்தடை அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் அணில் தான் என்று செந்தில் பாலாஜி கூறினார். மின்கம்பத்தில் உள்ள வயர்களில் அணில் ஓடுகிறது இதனால் வயர்களை உரசி மின்தடை ஏற்படுகின்றது என்று கூறினார். செந்தில் பாலாஜி கூறியது உண்மைதான் அணில்களால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று நிரூபிக்கும் வகையில் மின் ஊழியர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை என்னும் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து திடிரென்று வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டது. பின் மின் ஊழியர்கள் மின்தடை ஏற்பட்ட பகுதிக்கு வந்தனர்.

டிரான்ஸ்பார்மரில் இருந்த அணில்…
பின் மின்தடை எதனால் ஏற்பட்டது என் வெடித்தது என்று ஆராய்ந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது டிரான்ஸ்பார்மரை பழுதிநீக்க முயன்றபோது அணில் ஒன்று டிரான்ஸ்பார்மர்க்குள் அடிபட்டு இறந்து கிடந்தது. டிரான்ஸ்பார்மர் வெடித்தததற்கு அணில்தான் காரணம் என்று தெரியவந்ததது, இச்சம்பவத்தை அந்த மின் ஊழியர் தன் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். பின் மின் இணைப்பு பழுதுபார்க்கப்பட்டது. அவர் எடுத்து வெளியிட்ட வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது. அதுமட்டும்மில்லாமல் அந்த வீடியோ அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ஆதாரமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: