ஐசிசியின் 2012-2023 ஆகிய ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இந்த வருடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்குபெற்றுள்ள 9 சர்வதேச அணிகளுக்கான புள்ளி அடிப்படையில், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தற்போது, இந்த புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலிய அணி 75.56 சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்திய அணி 58.93 சதவீதத்துடன் 2வது இடத்திலும் உள்ளது. இதனை தொடர்ந்து, இலங்கை (53.33%) மற்றும் தென் ஆப்பிரிக்கா (48.72%) அணிகள் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். இதில், ஆஸ்திரேலிய அணி, அதிக சதவீதத்துடன் இருப்பதால், இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
- Advertisement -
இதே போல, எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 8 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.