ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை-2024க்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த மெகா போட்டியில் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். இந்த அணியின் துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை வாரியம் தேர்வு செய்துள்ளது.
போட்டிகள் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. குரூப்-ஏவில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இருக்கின்றன.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், தயாளன் ஹேமலதா ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.