நேவி மும்பையில் நடந்த UP மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான WPL 2023 இன் மூன்றாவது போட்டியில், UP அணி கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்து அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உ.பி., அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. உ.பி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறிப்பாக கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெற்றியை ஈட்டியது UP வாரியர்ஸ் அணி. இந்த சீசனில் குஜராத் அணி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை தழுவியது.
