மகளிருக்கான பிரிமியர் லீக் (WPL) தொடரின் முதல் சீசன் இந்தியாவில் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில், மும்பை, டெல்லி, குஜராத், பெங்களூர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய நகரங்களின் பெயர்களை மையமாக கொண்டு 5 அணிகள் பங்கு பெற உள்ளன.
இந்த 5 அணிகளுக்கு இடையே மும்பையில் மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை லீக் சுற்றுகளும், மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிளே ஆப் மற்றும் இறுதி போட்டியும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடர் போல, இந்த WPL லீக்குகான தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
- Advertisement -
இதற்கான தொடக்க விழாவில் பிரபல பாடகர் மற்றும் நடிகைகளான சங்கர் மகாதேவன், ஏபி தில்லான், கிருதி சனோன், கியாரா அத்வானி உள்ளிட்டோர் பங்கு பெற உள்ளதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது, இந்த WPL லீக் போட்டிகளுக்கான டிக்கெட் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மும்பையில் நடைபெற உள்ள இந்த லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.100-ஆகவும், அதிகபட்சம் ரூ.400-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டிக்கெட்டுகள் குறித்த முழு விவரத்தையும், BookMyShow அப்பில் காணலாம் என கூறப்படுகிறது.