உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று பிற்பகலில் மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக செஸ் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. அந்த வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைத்தது. அதன்படி, சென்னைக்கு அருகே அமைந்திருக்கும் சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் இன்று இந்த போட்டி நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச்சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு அரங்குகளில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று மாலை 3 மணிக்கு துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்று அடிப்படையில் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியானது வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh