ஐசிசி டி20 உலகக் கோப்பை-2024 இறுதிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியனாக்கும் ஆர்வத்தில் உள்ள இந்திய அணி… இன்றைய இறுதிப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் களம் இறங்குகிறது. இதேபோல் தென்னாப்பிரிக்க அணியிலும் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா:
எய்டன் மார் க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, என்ரிச் நோர்கியா, தப்ரிஸ் ஷம்சி.