அரையிறுதி போட்டிகள்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!!

 

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று (நவம்பர் 15) தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் இந்திய அணி, மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். நடப்பு உலகக் கோப்பையை பொறுத்த வரையில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்காத நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஈடுகொடுக்கலாம். இதனால் இரு அணிகளும் ஒரே மாதிரியான ப்ளேயிங் லெவனுடன் களமிறங்கும்.

 

இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.

 

நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:

டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (சி), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி.

 
 
Exit mobile version