பாரிஸ் ஒலிம்பிக்: மனு பாக்கருக்கு வெண்கல பதக்கம்.. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து..!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி X இல் பதிவிட்டுள்ளார், ‘பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை கொண்டு வந்த மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று வெற்றி. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பாகர் பெற்றுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. நாட்டிலேயே துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணியும் நீங்கள்தான். உங்கள் சாதனை பல விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும்” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு X இல் பதிவிட்டுள்ளார்.
மனுபாகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைக் கொண்டு வந்த மனு பாக்கருக்கு வாழ்த்துகள். உங்கள் சாதனையால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது’ என்று X இல் பதிவிட்டுள்ளார்.