பாரீஸ்: பாராலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி-47 போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத், நடப்பு சீசனில் 2.04 மீட்டர் உயரம் குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் ரோட்ரிக் டவுன்சென்ட் 2.12 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தையும், ஜார்ஜி மார்கீவ் (2.00 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) அதிகரித்துள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 27வது இடத்தில் உள்ளது.