டயமண்ட் லீக்கில் முதல் சுற்றிலேயே 88.67மீ தூரம் எறிந்து, தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹா நடப்பு ஆண்டுக்கான, முதல் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இந்த தொடரில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கு பெற்றார். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற லொசேன் டயமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்ற பிறகு, காயங்களால் அவதிக்கு உள்ளனர்.
இதனால், கடந்த 7 மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் பங்கு பெறாமல், காயத்தில் இருந்து மீண்டு துருக்கியில் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கி தற்போது, தோஹா நடைபெற்ற டயமண்ட் லீக் கலந்து கொண்டார். நீண்ட மாதங்களுக்கு போட்டிகளில் பங்கு பெற்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், நீராஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே, 88.67மீ தூரம் எட்டி எறிந்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து, 86.04 மீ, 85.47 மீ, 84.37 மீ மற்றும் 86.52 மீ தூரம் எறிந்தார். ஆனாலும், இவரது முதல் முயற்சியிலேயை 88.67மீ தூரம் எறிந்ததன் மூலம், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் 88.63 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், கிரனடாவின் ஆண்டர்சன் 85.88மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஒரு சீரான இடைவெளியில் நடைபெற இருக்கும் இந்த லீக் தொடருக்கான, இறுதி சுற்று செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் யூஜினில் நடைபெற இருக்கிறது.