நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் மாயாஜாலத்தால் அர்ஜென்டினா கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை-2022 இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதன் மூலம் 6 முறை ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணி என்ற சாதனையை அர்ஜென்டினா படைத்துள்ளது. இப்போட்டியில் ஜூலி அல்வாரெஸ் 2 கோல்களையும், மெஸ்ஸி 1 கோல்களையும் அடித்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்று தந்தனர்.
இதற்கிடையில், அர்ஜென்டினா தனது இறுதிப் போட்டியில் இரண்டாவது அரையிறுதி வெற்றியாளருடன் (பிரான்ஸ் அல்லது மொராக்கோ) விளையாடும். பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.