சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே பதவி வகித்து வருகிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பொறுப்பேற்ற கிரேக் பார்கிளேவின் 4 ஆண்டு கால பதவிக்காலம் வருகிற நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. 3 முறை பதவி வகித்து வந்த கிரேக் பார்கிளே தற்போது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதனால், இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா ஐஐசி தலைவர் போட்டிக்கு களமிறங்குகிறார். இந்த நிலையில், ஐஐசி தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.
இதனிடையே, இந்த பதவிக்கு ஜெய்ஷா மட்டுமே விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இதனால், வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.