நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதும் லீக் போட்டி, வரும் 21ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதலே டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இதை அறிந்த போலீசார், ரசிகர்களை அங்கிருந்து விரட்டினர். காலையில் தான் வரிசையில் நிற்க வேண்டும் என ரசிகர்களை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலான டிக்கெட் விற்கப்படும் என தெரிகிறது.