விறுவிறுப்பாக நடந்து வந்த 16வது சீசன் ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் பிரபல ராப் பாடகர்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும், முதல் இன்னிங்ஸ் முடிவில் ஜோனிடா காந்தி பாடல் பாட உள்ளார்.
