ஐபிஎல் 2024: சென்னை-பெங்களூரு போட்டி – நாளை டிக்கெட்டுகள் விற்பனை!

 

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

அதன்படி, தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தோனியும், விராட் கோலியும் நேரடியாக களம் இறங்கவுள்ளதால் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

இந்நிலையில், போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) காலை 9:30 மணிக்கு ஆன்லைனில் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை, ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version