ஐபிஎல் 17வது சீசன் தொடர்: முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை இன்று வெளியீடு

 

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 17வது சீசனின் கிரிக்கெட் அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டில் 17வது சீசன் அடுத்த மாதம் அதாவது மார்ச் இறுதியில் போட்டி தொடங்கப்பட உள்ளன.

 

இந்த நிலையில், இந்த தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்று கிரிக்கெட் பிரியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதே நேரம் நாடாளுமன்ற தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் அட்டவணை, இன்று வெளியாக உள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது.

 
 
Exit mobile version