பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 44.1 ஓவரில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸி., பந்துவீச்சாளர்களால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அடிக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரிந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் நிதிஷ் ரெட்டி (42), கேஎல் ராகுல் (37), ஷுப்மன் கில் (31), ரவிச்சந்திரன் அஷ்வின் (22), ரிஷப் பந்த் (11), விராட் கோலி (7), சிராஜ் (4 நாட் அவுட்), ரோகித் ஷர்மா (03) ரன்கள் எடுத்தார்.
ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் டக் டக் ஆக களம் விட்டு வெளியேறினர். ஆஸி. பந்துவீச்சாளர்களில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்னெஸ் மற்றும் ஸ்டாட் போலன்ட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.