பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஏற்கனவே தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, இந்த ஆட்டத்தில் ஆஸி.யை வீழ்த்தி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கலந்து கொண்டனர்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஹயாடி, ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி: ஸ்மித், ஹெட், கவாஜா, லாபுஷேன், ஹேண்ட்ஸ்கோம்ப், கிரீன், அலெக்ஸ் கேரி, ஸ்டார்க், டாட் மர்பி, நாதன் லியான், குனேமன்.