ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, முதல் பந்திலேயே டேவிட் மில்லரை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.