19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!!

 

தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசதுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வென்றது.

புளூம்ஃபோன்டைனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இந்திய பந்துவீச்சாளர்களில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முஷிர் கான் 2, ராஜ் லிம்பானி 1, அர்ஷின் குல்கர்னி 1, பிரியான்சு மோலியா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பங்களாதேஷ் இன்னிங்ஸில் மொஹமட் ஷிஹாப் ஜேம்ஸ் 54 ரன்களையும், அரிபுல் இஸ்லாம் 41 ரன்களையும் பெற்றனர். முன்னதாக, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது.

 
 
 
Exit mobile version