ind vs sl odi 2023

IND vs SL ODI 2023: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு..!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சானகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் முதலில் பந்துவீச்சை எடுத்ததாக ஷனகா தெரிவித்தார். இலங்கை அணியில் வெள்ளலகனேவுக்கு பதிலாக திக்ஷனா சேர்க்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.