
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ரோர்கி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா – நியூசிலாந்து அணிக்கு இடையேயான முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்டது, ஆனால் இரண்டாவது நாள் இன்று காலையில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் கடுமையாக பந்துவீசியதால், இந்திய வீரர்கள் விரைவாக பெவிலியன் அடைந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிவிஸ் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ரோர்கி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய இன்னிங்ஸில், ரிஷப் பந்த் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் விராட் கோலி, சர்பராஸ், ஜடேஜா, கே.எல்.ராகுல், அஷ்வின் ஆகியோர் ஐந்து பேட்டர்கள் டக் அவுட் செய்யப்பட்டனர். டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மிகக் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இது மூன்றாவது முறையாகும்.
ALL OUT FOR 46 🤯
It’s the lowest total India have been dismissed for at home https://t.co/tzXZHnJPJI | #INDvNZ pic.twitter.com/x7z1SPzW5N
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 17, 2024