ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சீசன் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 9 அணிகளுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளனர். இன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த இறுதி போட்டியானது நடைபெற இருக்கிறது.
இரு அணிகளுக்கும் உலக கோப்பையை வெல்வதற்கான கடைசி வாய்ப்பு என்பதால், போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மேலும், சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ள போட்டியில் வெற்றி யார் பக்கம் இருக்கும் என்ற எதிர்பார்புடனே போட்டி விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம்: மதியம் 3.00 PM
நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (சி), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்
டாஸ்:
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி உள்ளனர்.
