IND vs AUS: ஆஸி.,க்கு 241 ரன்கள் இலக்கு!

 

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கே.எல்.ராகுல் 66 ரன் (107 பந்து, 1 பவுண்டரி), விராட் கோலி (63 பந்து, 4 பவுண்டரி 54), ரோகித் சர்மா (31 பந்துகளில் 47 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்) சிறப்பாக விளையாடினர்.

 

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி இந்தியாவை ரன்களை எடுக்கவிடாமல் தடுத்தனர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் மற்றும் ஜம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 50 ஓவரில் 241 ரன்கள் தேவை. இந்தியா பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகும்.

 
 
Exit mobile version