Thursday, December 7, 2023
Homeவிளையாட்டுICC World Cup 2023ஐசிசி உலகக்கோப்பை 2023: இவர்கள்தான் வர்ணனையாளர்கள்.. வெளிவந்த நட்சத்திரங்களின் பட்டியல்!!
- Advertisment -

ஐசிசி உலகக்கோப்பை 2023: இவர்கள்தான் வர்ணனையாளர்கள்.. வெளிவந்த நட்சத்திரங்களின் பட்டியல்!!

- Advertisement -

அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பார்வையாளர் வர்ணனையாளர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

வர்ணனையாளர்களாக இந்தியாவின் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான மேத்யூ ஹைடன், ஷேன் வாட்சன், ஆரோன் பின்ச், ஆஸ்திரேலியாவின் மூத்த வீராங்கனை லிசா தோலேகர், பாகிஸ்தானின் மூத்த வீரர் ரமீஸ் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வர்ணனையாளர்களாக இருந்த நாசர் ஹுசைன், இயான் ஸ்மித் மற்றும் இயான் பிஷப் ஆகியோரும் இம்முறை இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வக்கார் யூனிஸ், ஷான் பொல்லாக், அஞ்சும் சோப்ரா, மைக்கேல் அதர்டன், கேட்டி மார்ட்டின், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக் உட்பட பல சர்வதேச சின்னங்கள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஆகியோரும்  வர்ணனையாளர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளது.

உலகக் கோப்பை போட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty one − = eleven

- Advertisment -

Recent Posts

error: