இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனார். இறுதி 14வது ஆட்டத்தில் சீனாவின் லிரனை வீழ்த்தி குகேஷ் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.
18 வயதில் குகேஷ் இந்த சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்தார். மொத்தம் 14 ஆட்டங்களில் குகேஷ் 3 ஆட்டங்களிலும், லிரன் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். ஒன்பது ஆட்டங்கள் டிரா ஆனது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற குகேஷுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.